சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 29 March, 2025 2:28 PM IST

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தல்லேவால், இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையான கனெளரியில், பஞ்சாப் விவசாயச் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் (வயது 70) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதற்கிடையே, அவரது உடல்நிலை மோசமடைந்தபோதிலும் சிகிச்சைக்கு மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வந்தார்.

உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அவர் மருத்துவச் சிகிச்சையை ஏற்காமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதற்கிடையே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலையும் மத்தியக் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, தல்லேவால் மருத்துவச் சிகிச்சைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும், கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என தல்லேவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தல்லேவால், இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங், இன்று தண்ணீர் ஏற்றுக்கொண்டு தல்லேவால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்" எனத் தெரிவித்தார்.

இதை வரவேற்ற நீதிபதிகள், தல்லேவால் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர். மேலும் நீதிபதிகள், "களத்தில் நிலவும் நிலைமை குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, சர்வான் சிங் பந்தர், காகா சிங் கோட்டா மற்றும் அபிமன்யு கோஹர் உள்ளிட்ட 245 விவசாயிகளைக் கொண்ட கடைசி குழு இன்று அதிகாலையில் பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்தே அவர், தண்ணீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: 

CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.

ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது

English Summary: Farmer leader Dallewal breaks fast after 100 days of protest
Published on: 29 March 2025, 02:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now