50 சதவீத மானியத்தில் சோலாா் மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விவசாய உற்பத்தியை பாதிக்காமலும், விளைபொருள்களின் வருவாயை பெருக்கிடவும், சூரியசக்தியால் இயங்கும் சோலாா் மின்வேலியினை (Solar power Fence) ரூ.3 கோடி மானியத்துடன் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
50% மானியம் (50% subsidy for solar fence)
மின்வேலி அமைக்கப்படுவதால், விலங்குகள், வேட்டைக்காரா்கள் விவசாய நிலங்களுக்குள் புக முடியாது. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் மின்வேலியை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை என அமைக்கலாம்.
சூரியஒளி மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு தோராயமாக 5 வரிசைக்கு ரூ. 250, 7 வரிசைக்கு ரூ.350 மற்றும் 10 வரிசைக்கு ரூ.450 என செலவாகும். தனி விவசாயிக்கு, அதிகபட்சமாக 2 ஏக்கா் அல்லது 1,245 மீட்டா் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.
யாரை அணுகவேண்டும்?
ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள ராமநாதபுரம் உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் செல்லிடப்பேசி எண்: 98659-67063 ,பரமக்குடி, நயினாா்கோயில், முதுகுளத்தூா், போகலூா், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவிலுள்ள பரமக்குடி உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் செல்லிடப் பேசி எண்: 94861-79544 விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
தேங்காய் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்!!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ரூ.100 கோடியில் கலப்பின பசு உற்பத்தி மையம்!
நெல்லியில் ரூ.78 கோடியில் உணவுப் பூங்கா - அடிக்கல் நாட்டிய முதல்வர்!!