News

Wednesday, 06 November 2019 05:18 PM

தமிழக விவசாயிகள் உரங்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், நிலையான மற்றும் வெளிப்படையான விலை பட்டியலை கூற வேண்டும் என வேளாண் துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக யூரியா உள்ளிட்ட, பல்வேறு வகையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகள் மூலமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பருவ மழை பெய்ததை தொடர்ந்து தற்போது, தமிழகம்  முழுவதும், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இவற்றிற்கு தேவையான உரங் களை வேளாண் துறையினர் மத்திய அரசிடமிருந்து பெற்று மாநிலங்களுக்கு விநியோகிக்கின்றனர். இம்முறை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள உரங்கள் இதுவரை வேளாண் துறையினரை வந்தடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உரங்களின் தேவை அதிகரித்திருப்பத்தை ஒரு சில தனியார் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் உள்ள அதிகாரிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  உரங்களை நிர்ணயத்தை விலையை விட அதிகமாக விற்கிறார்கள் என விவசாயிகள் கூறுகின்றனர்.  45 கிலோ எடையுள்ள யூரியா மூட்டை, 267க்கு பதிலாக, ரூ.310க்கும், 950க்கு விற்பனையான பொட்டாஷ், ரூ.1,000 க்கும் , 1,390க்கு விற்பனையான டி.ஏ.பி., ரூ.1,450க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

அரசின் உத்தரவு படி உரம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உரங்களின் விலை, அவற்றின் கைஇருப்பு , போன்ற தகவல்களை கடைகளுக்கு வெளியே எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதை எவரும் பின்பற்றுவதில்லை.  எனவே, உரங்களின் விலையை கட்டுப்படுத்த, வேளாண் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)