வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைய விவசாயிகள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்தில் விவசாயப் பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதிலும், வேளாண் விளை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்லும் போதும், அதனை விற்பனை செய்யும் போதும் சில இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
இந்த இடர்பாடுகள், குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய ஏதுவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட தலைமையிடத்தில் விவசாயிகள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான காய்கறிகள் விற்பனை செய்தல், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விற்பனை குறித்த சந்தேகங்களுக்கு விவசாயிகள் 0461-2340678 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
காய்கறிகளை விற்பனை செய்ய மானிய விலையில் விவசாயிகளுக்கு தள்ளுவண்டி - வேளாண் துறை!
வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய பிரச்சனை இருந்தால் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்!!