தமிழகத்தில் கடந்த வருடம் புரெவி (Burevi) மற்றும் நிவர் புயல்களால் (Nivar storm) விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தவிர பருவமழைத் தவறி பெய்த மழையால் ஏராளமான பயிர்கள் (Crops) மழையில் மூழ்கி வீணாகியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் மற்றும் காப்பீடுத் தொகை (Insurance Amount) வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாகுபடி பாதிப்பு:
தொடர் மழையால், பாதித்த, மானாவாரி பயிர்களுக்கு நிவாரணம் பெற, வருவாய்த்துறையிடம், விவசாயிகள், விண்ணப்பித்து வருகின்றனர். குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழையை (Northeast Monsoon) ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக, கொண்டைக்கடலை, கொத்தமல்லி, மக்காச்சோளம் (Maize) சாகுபடியாகிறது. நடப்பாண்டு, செடிகள் பூ விடும் தருணத்தில், தொடர் மழை பெய்தது. பருவம் தவறிய மழையால், பூக்கள், உதிர்ந்தது; பெரும்பாலான விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி, செடிகள் அழுகியது. பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரி சாகுபடி (Harvest) முற்றிலுமாக பாதித்தது.
நிவாரணத்திற்கு விண்ணப்பம்:
ஆண்டுக்கு ஒரு முறை சாகுபடியில், கிடைக்கும் வருவாயும் (Income) கிடைக்காத நிலை ஏற்பட்டதால், விவசாயிகள், நிவாரணம் வழங்க அரசுக்கு, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தற்போது, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO), இழப்பீட்டுக்காக, சிட்டா, அடங்கல் உள்ளடக்கிய, விண்ணப்பத்தையும் சமர்ப்பித்து வருகின்றனர். அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், விவசாயிகளின் வங்கிக்கணக்கு வாயிலாக, நிவாரணம் செலுத்தப்படும் வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வேளாண் சட்டங்கள் குறித்த ஆலோசனை துவக்கம்! விவசாய அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது சமரசக் குழு!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
நஞ்சில்லா காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒன்றிணைந்த விவசாயிகள்!