புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேளாண் சட்ட நகல்களை எரித்து ஹோலி பண்டிகையை கொண்டாட வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்த 120 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் நேற்று புதிய வடிவத்தை எட்டியது.
சட்ட நகல் எரிப்பு
அதன்படி, டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களின் தீயிட்டு எரித்தனர்.
வழக்கமாக ஹோலி பண்டிகையின் போது தேவையில்லாதவற்றை தீமூட்டி எரிப்பது வழக்கம் அந்தவகையில் நாட்டுக்கு தேவையில்லாதது இந்த புதிய வேளாண் சட்டகள் ஏற்று குறிப்பிடும் வகையில் விவசாயிகள் இந்த சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தனி சட்டம் இயற்றப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு கழகங்கள் முற்றுகை
இதேதொடர்ந்து வரும் ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிடுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.