தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல்
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை காங்கிரஸ் கட்சி தற்போதே ஆரம்பித்து விட்டது.
ஓய்வூதியத் திட்டம்
இதன் ஒரு பகுதியாக, சட்டர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்நாத் இவ்வாறு கூறினார்.காங்கிரஸ் கட்சி 2023ம் ஆண்டு, மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்த அவர், அவ்வாறு ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
முயற்சி
தனது ஆட்சிக்காலத்தில், விவசாயிகளின் கடனுக்கான வட்டிச்சுமைய நீக்கவும், பயிர்க்கடன்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த முடிவை, பிஜேபி அரசு மூடு விழா கண்டதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க...