News

Friday, 11 June 2021 08:14 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் சுற்று வட்டாரப் பகுதியில் கோவைக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவைக்காய் விவசாயம் செய்வதற்கு மானியம் (Subsidy) வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான தொழில்

வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாகும். பெரும்பாலான விவசாயிகள் ஆண்டு பயிராக கரும்பு (Sugarcane), மரவள்ளி, மஞ்சள் ஆகியவற்றையும், பருவ கால பயிராக நெல், கம்பு, மக்காச்சோளம் (Maize), கேழ்வரகு, மணிலா, உளுந்து ஆகியவற்றையும் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, காய்கறி பயிர்களை ஒருசில விவசாயிகள் மட்டுமே பயிரிட்டு வருகின்றனர். அந்தப் பயிருக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிவகைகளை செய்து வரும் விவசாயிகள் சொட்டு நீர் பாசன (Drip Irrigation) முறைக்கு அதிகளவில் மாறி வருகின்றனர்.

கோவைக்காய் சாகுபடி

வெறையூர் மற்றும் வலசை ஆகிய சுற்று வட்டாரப் பகுதியில் கோவைக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவைக்காய் பயிருக்கு பந்தல் அமைத்து, கோவைக்காய் கொடியை பந்தல் மீது ஏற்றி விடுவது, தொடர்ந்து களை எடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதால் இந்தப் பயிருக்கு பராமரிப்பு பணி அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மானியம் வழங்க நடவடிக்கை

வெறையூர் மற்றும் வலசை பகுதியில் பயிரிடப்படும் கோவைக்காய் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு ஏற்றுமதி (Export) செய்யப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோவைக்காய் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டும் இப்பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன முறைகள் அதிகளவில் கிடைக்கவில்லை, எனத் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் சொட்டுநீர் பாசன முறையில் பயிரிடப்படும் காய்கறி பயிர்களுக்கு மானியம் (Subsidy) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)