News

Tuesday, 27 April 2021 06:09 PM , by: R. Balakrishnan

Credit : Samayam Tamil

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிக்குளம், தெற்குபாப்பாங்குளம், மூலச்சி, உலுப்படிபாறை, தெற்கு கல்லிடைக்குறிச்சி, பொட்டல் ஆகிய பகுதிகளில் சுமார் 2,600 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

முன்கார் சாகுபடி

தற்போது முன்கார் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து மே 1 ஆம் தேதி பெருங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் சங்கம் (Farmers Group) சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான ஆவுடையப்பன் தலைமையில், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து மனு அளித்தனர். இனைத் தொடர்ந்து ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது 2600 ஏக்கர் முன்கார் சாகுபடி நடந்து வருகிறது.

Credit : Dinakaran

பாசனத் தேவை

இதன் பாசனத் தேவைக்கு கடந்த ஆட்சி காலங்களில் முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறை வழக்கம்போல் முறையாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்" என்று ஆவுடையப்பன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆவின்ஆறுமுகம், கணேஷ்குமார் ஆதித்தன், அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பரணிசேகர், விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)