News

Wednesday, 04 November 2020 04:07 PM , by: Daisy Rose Mary

பருவநிலை மாற்றத்தால் வேகமாக அழுகிவரும் தக்காளிகளை, சூளகிரி பகுதி விவசாயிகள் ஏரியில் கொட்டி வருகின்றனர். உரிய விலை கிடைக்காகததால் வேதனையும் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கன்னிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி விளைவிக்கப்படுகிறது. பின்னர் இவை சூளகிரியில் உள்ள தக்காளி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் போன்ற பெரு நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பபடுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்கப்பட்டது. மேலும், தக்காளி மார்க்கெட்டிலும் 30 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.800 வரை விலை போனது. இவ்வாறு உச்ச விலையில் இருந்த தக்காளி விலை கடந்த ஓரிரு நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நோய் தாக்கம்

திடீரென பரவிய நோய் தாக்கத்தால், 30 கிலோ எடை கொண்ட ஒரு கூடை வெறும் 100 ரூபாய்க்கும் குறைவாக விலை போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் வரவேற்பு இல்லாமல், டன் கணக்கில் தக்காளிகள் ஏரியில் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில், தற்போது பருவநிலை மாற்றத்தால் தக்காளி செடிகளை நோய் தாக்கி வருகிறது. இதனால், செடிகளிலேயே தக்காளி காய்ந்தும், அழுகி விடுகின்றன.
பொதுவாக தக்காளியை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தாலும் 4 அல்லது 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஆனால் தற்போது 2 நாட்களுக்குள்ளாகவே அவை அழுகி போகின்றன. இதனால் மார்க்கெட்டில் வரவேற்பு குறைந்து விட்டது.

விலை சரிவு

ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய குறைந்தது ரூ.50,000 வரை செலவாகிறது. ஆனால் தற்போது அதை சந்தைக்கு எடுத்து வரும்போது 1 ஏக்கருக்கு ரூ.5,000 கூட கிடைப்பதில்லை. எனவே, தக்காளி விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு அவற்றை ஏரியிலும், சாலையோரத்திலும் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் படிக்க..

ரேஷன் கடை மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் - மத்திய அரசு!!

அடுத்த 3 நாட்களில் எந்த எந்த மாவட்டங்களில் மழை இருக்கும் - லிஸ்ட் உள்ளே !!

இயற்கை முறையில் முந்திரி சாகுபடி - அசத்தும் கடலூர் விவசாயி ராமராஜன்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)