விருதுநகர் சம்பா சிவப்பு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா என விவசாயிகள், வர்த்தகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மிளகாய் ஒரு பணப்பயிர் ஆகும். மிளகாய் பயிர் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் வகையாகும்;. மிளகாய் இந்திய சமையலின் பிரிக்கமுடியாத அங்கமாகும். சிவப்பு மிளகாயில் வைட்டமின் யு மற்றும் ஊ சத்துக்கள் நிறைந்துள்ளது. ‘காப்சைசின்” என்பது மிளகாயின் காரத்தன்மை காரணியாகும்.
சம்பா சிவப்பு மிளகாய் (Samba Red Chilli)
ஓரிடத்தில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள், இயற்கை பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமைக்கும், பொருட்களின் பாரம்பரியத்திற்கும், உயர்ந்த தரத்திற்கும் சான்றாக விளங்குகிறது.
உலக மிளகாய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் பாரம்பரிய ரகமான சம்பா சிவப்பு மிளகாய் அதன் காரத்தினால் சிறப்பு தன்மையை பெற்றது. தமிழக வேளாண் விற்பனை வாரியம், நபார்டு வங்கி, அக்ரி இன்குபேஷன் போரம் இணைந்து சிறப்பு பயிர்களுக்கு குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புவிசார் குறியீடு (Geographic Code)
இந்தாண்டில் பாரம்பரிய 10 பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் விருதுநகர் சம்பா சிவப்பு மிளகாய், தென்காசி மாவட்டம் கடையத்தில் பாரம்பரிய சுவை, அதிக பழச்சாறு, சந்தை மதிப்பு மிக்க எலுமிச்சை, சமைத்தால் மல்லிகை போல் வெண்மையாக காணப்படும் பாரம்பரிய துாய மல்லி அரிசி, மதுரை சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி முந்திரி, பலாப்பழம் போன்றவற்றுக்கும் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
முருங்கை சாகுபடியில் பிசினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
செயற்கை உரங்களின் தேவை குறைய வாய்ப்பு: புதிய வழியில் ஆராய்ச்சியாளர்கள்.!