பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 February, 2021 6:55 PM IST
Credit : Dinamani

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை (Agri bills) எதிர்த்து தலைநகர் டெல்லியில் (Delhi), விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் அடுத்த கட்டப் போராட்டமாக இன்று (பிப்ரவரி 18), நான்கு மணி நேரம் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை (Rail Stir Fight) நடத்தினர்.

இரயில் மறியல் போராட்டம்:

நாட்டின் பல மாநிலங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support price) முறையை உறுதி செய்யவும், நவம்பர் 26 முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நண்பகல் முதல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இரயில் மறியல் போராட்டத்தையொட்டி முக்கிய இரயில் நிலையங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே காவல் துறையினர் (Railway Police) குவிக்கப்பட்டுள்ளனர்.

அரியானாவின் (Haryana) பால்வால் ரயில் நிலையத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அங்குப் பாதுகாப்புக்காகக் காவல் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மறியலையொட்டி ரயில்கள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பீகாரில் (Bihar) பாட்னா ரயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜன அதிகாரக் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

காஷ்மீரில் (Kashmir), ஜம்மு ரயில் நிலையத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் நடைபெற்றது. தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கமிட்டனர். இதேபோல் பஞ்சாபிலும் உத்தரப் பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!

பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!

English Summary: Farmers gather on the tracks in protest of the rail strike!
Published on: 18 February 2021, 06:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now