ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சளின் (Turmeric) விலை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மஞ்சள் விலை உயர்வு:
வடமாநிலத்தவர்கள் இங்கு வந்து விதை மஞ்சளை (Seed Turmeric) வாங்கிச் சென்று விளைவித்து விற்பனை செய்ததால் ஈரோட்டு மஞ்சளுக்கான விலை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவை சந்திக்கத் தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் ஈரோடு மாவட்டச் சந்தைகளில் மஞ்சளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பழைய விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 8 ஆயிரத்து 269 ரூபாய் வரையிலும், பழைய கிழங்கு மஞ்சள் 7 ஆயிரத்து 499 ரூபாய் வரையிலும், புது விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 7 ஆயிரத்து 711 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 7 ஆயிரத்து 699 ரூபாய் வரையிலும் விற்பனையானது. புது மஞ்சள் வரத்து குறைவு காரணமாகவும், பழைய மஞ்சளுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், ஏற்றுமதியின் (Export) அளவு கடந்தாண்டுகளை விட 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் மிகழ்ச்சி
தேவை அதிகரிப்பு, புதிய மஞ்சள் (fresh Turmeric) வரத்து குறைவால், மஞ்சள் விலை உயர்ந்துள்ளதை அடுத்து விவசாயிகள் மிகழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் (Turmeric merchants) மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்திரமூர்த்தி (Sathyamoorthi) கூறியதாவது: சில மாதமாக புதிய மஞ்சள் குறைவு, ஏற்றுமதி மற்றும் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது. ஈரோடு, செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வரத்தான புதிய மஞ்சள், 500 மூட்டை, பழைய மஞ்சள், 1,500 மூட்டை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், 300 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் தற்போது அறுவடை (Harvest) துவங்கியதால், ஈரோடு சந்தைக்கு (Erode market) தினமும், 200 மூட்டைக்கு மேல் வரத்தாகிறது. இம்மாத இறுதியில் அறுவடை முடியும். மார்ச் முதல் வாரம் முதல் தினமும், 15 முதல், 20 லோடு வரை வரத்தாகும். மஹாராஷ்டிமா மாநிலம் சாங்கிலி, பஸ்மத், மரத்வாடா பகுதிகளில், தற்போதுதான் புதிய மஞ்சள் வரத்தாகி துவங்கி உள்ளது. ஈரோடு வராவிட்டாலும், ஈரோடு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வங்கதேசத்துக்கு மஞ்சள் செல்கிறது. இதனாலும் மஞ்சள் தேவை மற்றும் விலை அதிகரித்துள்ளது. தொடர் அறுவடை, வரத்து அதிகரித்தாலும், தேவை, ஏற்றுமதி அதிகமாக உள்ளதால், மஞ்சள் விலை குறைய வாய்ப்பில்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க புதிய செயலி அறிமுகம்!