News

Tuesday, 16 January 2024 06:00 PM , by: Muthukrishnan Murugan

MFOI Samridh Kisan Utsav

MFOI 2024 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. மஹிந்திரா, ஹுண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புடன் வேளாண் கண்காட்சி அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு இன்று சிறப்பாக நடைப்பெற்றது.

நிகழ்வில் யாரெல்லாம் பங்கேற்பு?

MFOI 2023 நிகழ்வில் RFOI விருதினை வென்ற ராஜா ராம் திரிபாதி, ராகவேந்திரா சிங் சண்டல் ஆகியோர் பங்கேற்று நிகழ்விற்கு வந்திருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடி உத்வேகம் அளித்தனர். சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்ட 'நெல் பயிரில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, தினை சாகுபடி, டிராக்டர் தொழிலில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் டிராக்டர் பராமரிப்பு’ குறித்து துறை ரீதியிலான அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

டாக்டர்.ஆர்.கே.எஸ்.தோமர்- நெற்பயிரில் பூச்சி மேலாண்மை குறித்து உரையாடினார். அவரைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் நாராயணன் சிங் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படும் மானியம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மகேந்திரா டிராக்டர் நிறுவனத்தினை சேர்ந்த நபர், டிராக்டர் பராமரிப்பு குறித்து விளக்கினார். பிலாஸ்பூர் கேவிகே தலைமை அலுவலர், அருண் குமார் திரிபாதி தினை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக அறிவுரை வழங்கினார்.

மனோஜ் சவுகான் அரசின் சார்பில் விவசாயிகளுக்காக உள்ள மானியத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இந்த நிகழ்வில் BTS வேளாண் கல்லூரியின் இயக்குனர் ஆர்.கே.எஸ்.திவாரி, அஜய் வெர்மா, மற்றும் பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் அவுனிஸ் குமார் சரான் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் வேளாண் ஆலோசகர்கள், வேளாண் விஞ்ஞானிகள் பலரும் பங்கேற்றிருந்த நிலையில்- விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக ”சம்ரித் கிஷான் உட்சாவ்” திகழ்ந்தது என நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

MFOI விருதுகள் 2024:

வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளிடமிருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் தேர்வான விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் டிசம்பர் 6,7,8 நடைப்பெற்றது.

2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read also:

ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine

MFOI 2024 நிகழ்வின் ஒருபகுதியாக ஹரியானாவில் Samridh Kisan Uttsav நிகழ்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)