திண்டுக்கல் மாவட்டத்தில், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம், ரெங்கராஜபுரம் காலனி, கதிர்நாயக்கன்பட்டி, சாலைபுதூர், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக மழை பெய்தது. இதனால் 10 ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. விவசாய கிணறுகள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டம் (Ground Water level) உயர்ந்து ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
கோடைமழை
தற்போது பட்டிவீரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடைமழை பெய்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மழை பெய்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த கோடையில், நிலத்தில் பயிரிட்டு, மண்வளத்தை பெருக்குவது மிக அவசியம். மேலும், கோடை உழவின் அவசியத்தை உணர்நத, வேளாண் துறையும் விவசாயிகள் கோடையில் பயிரிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. விவசாயிகளும் ஆர்வத்துடன் கோடை உழவில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழை சாகுபடி
இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதிகளில் வாழை சாகுபடியில் (Banana Cultivation) விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வாழைக்கன்றுகள் நடவு செய்யும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நெல்லூரை சேர்ந்த வாழை விவசாயிகள் கூறும்போது, வாழைக்கன்றுகள் நடவு செய்ய மே, ஜூன் மாதங்கள் சிறந்தது ஆகும். இதனால் தற்போது நடவு (Planting) செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாழைக்கன்று நடவு செய்த 10 முதல் 12 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்றனர்.
மேலும் படிக்க
கடலூரில் அமோக விளைச்சலைத் தரும் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி!
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பனை ஓலை பெட்டி! வியாபாரிகள் ஆர்வம்!