புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடியை (Samba Cultivation) அறுவடை செய்த பிறகு விவசாயிகள் தற்போது கோடை நடவு சாகுபடியை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெல் சாகுபடி அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் பல விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். தொடர் மழையால் நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்ததோடு நெற் கதிர்களை அறுக்க முடியாமல் போனது.
கோடை உழவில் விவசாயிகள்:
பருவம் தவறி அறுவடை செய்ததால் சரியான விலை கிடைக்காமலும், பெரிய நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்தாலும், தொடர்ந்து நல்ல மழை பெய்ததன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பின. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் (Ground water level) உயர்ந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கோடை உழவுப் (Summer farming) பனியைத் தற்போது தொடங்கியுள்ளனர்.
கோடை உழவுவின் பயன்கள்
- மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது.
- மண் அரிமானம் (Soil erosion) கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது.
- முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
- சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வருமானம் 2024-க்குள் இரு மடங்காகும்! ஐ.நா.வில் இந்தியா விளக்கம்!