உடுமலை பகுதியில் தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி (Cultivation of castor) செய்து விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். ஆமணக்கில் 50 சதவீதத்துக்கும் மேல் எண்ணெய்ச் சத்து உள்ளதால் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக உள்ளது.
ஆமணக்கவின் பயன்கள்:
ஆமணக்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சித்த மருத்துவம் (Siddha medicine) மற்றும் நாட்டு மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சோப்பு, காகிதம், அச்சு மை மற்றும் பிளாஸ்டிக் பைகள் (Plastic bags) தயாரிப்பிலும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர விமான எந்திரங்களின் உராய்வை குறைப்பதற்கும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெடி மருந்துப்பொருட்கள் உற்பத்தியிலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் ஆமணக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் ஆமணக்கு பயன்படுத்தப்படுவதால் நல்ல விலை கிடைத்து வருகிறது.
வீரிய ஒட்டு ரகம்
உடுமலை பகுதி விவசாயிகள் தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பொதுவாக பிரதான பயிரை பூச்சி தாக்குதலில் (Pest Attack) இருந்து காப்பாற்றும் கவர்ச்சிப் பயிராகவே ஆமணக்கு பயிரிடப்பட்டு வருகிறது. இவ்வாறு வேலிப் பயிராக ஆமணக்கு சாகுபடி செய்து நல்ல வருவாய் (Good income) ஈட்டிய ஒரு சில விவசாயிகள் தற்போது தனிப் பயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வறட்சியைத் தாங்கி வளரக் கூடியதும், நோய் எதிர்ப்புத்திறன் (Immunity), அதிக மகசூல் அளிக்கும் திறன் கொண்ட வீரிய ஒட்டு ரக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் அதிக மகசூல் (Yield) பெற முடியும். விதைத்த 3 மாதம் முடிவில் முதல் அறுவடை செய்ய முடியும். இதனையடுத்து 3 ம் மாதம் முடிவிலும், 4 ம் மாதம் முடிவிலும் அறுவடை மேற்கொள்ள முடியும்.
மகசூல்
ஒரு குலையிலுள்ள ஒன்றிரண்டு காய்கள் முற்றி பழுப்பு நிறமாக மாறினால் அந்த குலை முழுவதும் அறுவடை செய்து விடலாம். இறவைப் பாசனத்தில் ஆமணக்கு சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக 1500 கிலோ வரை மகசூல் (Yield) பெற முடியும். தற்போது இந்த பகுதியில் மானாவாரியில் ஆமணக்கு சாகுபடி செய்துள்ள நிலையில் பெரிய அளவில் பராமரிப்பு இல்லாமலும் வருவாய் ஈட்ட முடிகிறது. மேலும் ஆமணக்கைப் பொறுத்தவரை காவடிப்புழு, கம்பளிப்புழு போன்ற இலைப்புழுக்கள் மற்றும் பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, சிவப்பு சிலந்திப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும். அவற்றுக்கு முறையான மருந்துகள் தெளித்து பராமரிப்பதன் மூலம் நல்ல மகசூல் பெற முடியும் என்று விவசாயிகள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!