இயற்கை விவசாயம் வேகமாக பரவி வருகிறது. அதை முன்னெடுக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்ஃபினிட் சேவா, ரிச் பிளஸ் மற்றும் அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர் ஆகிய அமைப்புகள் இணைந்து 'இயற்கை விவசாயத்தை தீவிரமாக செயல்படுத்த விவசாயிகளுக்கு திறனதிகாரம் அளிப்பது' என்ற தலைப்பில் மதுரையில் மாநாட்டை நடத்தின.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை பிரதானமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPO) தலைவர்கள் மற்றும் விவசாயிகள் என 600-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இன்ஃபினிட் சேவா சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மணிமாறன் வரவேற்புரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து இன்ஃபினிட் சேவா அமைப்பின் தலைவர் நளினி பத்மநாபன் பேசினார். அவர் பேசியபோது, "உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயத்தின் தூண்களாக இருந்து வருகின்றன. இயற்கை விவசாயத்தை ஏற்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த முயற்சியில் ஒரு பங்காக இந்த மாநாடு இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முயற்சியானது ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்
நன்னெறி வேளாண்மையில் உபயோகிக்கப்படும் அங்கக உரங்கள் (organic manures) மூலம் மண்ணின் உயிர்த்தன்மை அதிகரிக்கும். உயிர் உரங்களின்( biofertilizers) மூலம் மண்ணில் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். இரண்டும் சேர்ந்து வேளாண்மையில் நிலைத்த வருமானம் கொடுக்க கூடியதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இதோடு நம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையிலும் இருக்கும். எனவே, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் அழிவின் விளிம்பிலிருந்து மண்ணை மீட்பதும் நாம் ஒவ்வொருவரின் கடமை" என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், "எதிர்கால இந்திய விவசாயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையாக உணர்ந்து, அதனை பேணிப் பாதுகாக்கும் நடைமுறைகளில்தான் அடங்கியுள்ளது