Credit : Samayyam
தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் வேதனையடைந்த விவசாயிகள், டன் கணக்கில் தக்காளி பழங்களை ஏரியில் கொட்டிய சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி சூளகிரி, ஒசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி (Tomato Cultivation) செய்துள்ளனர். விலை குறைவால், மிகுந்த வேதனையில் விவசாயிகள் ஏரியில் தக்காளியை கொட்டியுள்ளனர்.
விலை வீழ்ச்சி:
கடந்த மாதங்களுக்கு முன்பு வரை தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்தனர். இதனால் தற்போது தக்காளி வரத்து அதிகரித்தது. வரத்து அதிகரிப்பால் தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ தக்காளி 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
விவசாயிகள் வேதனை:
இதனால் விவசாயிகளுக்கு அறுவடை கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட கிடைக்காததால் உரிய விலை கிடைக்கவில்லை என அறுவடை (harvest) செய்யப்பட்ட தக்காளிப் பழங்களை, டன் கணக்கில் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரியில் விவசாயிகள் வேதனையுடன் கொட்டி சென்றுள்ளனர்.
விளைச்சல் அதிகமானால், விற்பனை விலை குறைந்து விடுகிறது. மழையின்றி விளைச்சல் குறைந்தாலும் இலாபமின்றி நஷ்டமே அடைகிறார்கள் விவசாயிகள். இந்நிலை எப்போது தான் மாறும். விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற அரசு தனி கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். இயற்கை சீற்றங்களால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்குவதைப் போல், விலை குறையும் நேரங்களிலும் விவசாயிகளுக்கு அரசு உதவி வேண்டும். அப்போது தான், விவசாயிகளின் வேதனையை ஒரளவாவது குறைக்கும் முடியும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பிரபலமாகி வரும் வாழை இலை குளியல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பருத்தியைக் கொள்முதல் நிலையங்கள் மூலம் விலைக்கு வாங்க அரசு முன்வர வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!