இன்றளவும் விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது தங்களது விளைப்பொருட்களை சரியான விலையில் விற்க முடியாமல் போவது தான். உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் (farmers producer organisation- FPO) வாயிலாக தயாரிக்கப்படும் பொருட்களை விற்க, அவர்களை டிஜிட்டல் மயப்படுத்தும் நோக்கத்தோடு அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற உலகளாவிய ஈ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மாற்றாக ONDC தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்தியா முழுவதுமிருந்து 5,630-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் தயாரிப்புகளான அரிசி, பருப்பு வகை, தேன், தினை, காளான், மசாலாப் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பொருட்கள் அரசாங்கத்தின் இ-காமர்ஸ் தளமான ONDC-ல் விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பலனடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ONDC-ல் FPO விற்பனை பொருட்கள்:
உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (FPO) ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு, ONDC தளத்தில் சேரத் தொடங்கியதிலிருந்து, 8,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 3,100- க்கும் மேற்பட்ட வகையான தயாரிப்புகள் தற்போது ONDC தளத்தின் வாயிலாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.
இந்த தளமானது டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆன்லைன் பேமெண்ட், பிசினஸ்-டு-பிசினஸ் மற்றும் பிசினஸ்-டு-நுகர்வோர் இடையேயான பரிவர்த்தனைகள் போன்றவற்றின் நேரடி அணுகலை FPO-விற்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேலாக அல்லது அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து FPO- களும் விரைவில் ONDC-ல் இணைக்கப்படும். இதனால் அவர்கள் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்க முடியும்.
ONDC- மூலம் பிசினஸ் நடைப்பெறுவது எப்படி?
ONDC (Open Network of Digital Commerce) தளமானது, லாஜிஸ்டிக் சேவையில் இயங்கி வரும் Mystore, PayTM, Maginpin மற்றும் Delhivery உட்பட 30 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், Mystore இணையதளத்தில் சென்று ONDC பிரிவில் பதிவு செய்துள்ள ஏதேனும் FPO-களின் தயாரிப்புகளை ஆன்லைன் வாயிலாக வாங்க இயலும்.
சமீபத்தில் கூட டெக் உலகில் முன்னணி விளங்கும் மெட்டா (FB, whatsapp) FPO உள்ளிட்ட சிறு வணிகங்களை மேம்படுத்த ONDC உடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ONDC தளம்: FPO-க்கு கிடைத்த லாபம்
கடந்த இரண்டு மாதங்களில், Rich Returns (Baran) ராஜஸ்தானை சேர்ந்த FPO-க்கள் Mystore மூலம் ரூ.3,00,000 மதிப்புள்ள chana, பூண்டு மற்றும் தினை சார்ந்த பொருட்களை விற்பனை செய்துள்ளன. ரிச் ரிட்டர்ன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி ஓம் நகர் தெரிவிக்கையில் இந்த நிதியாண்டில் ONDC வாயிலாக ரூ. 4,00,000-க்கு விற்பனை செய்துள்ளோம் என முன்னணி நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டமைப்பு, அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (GeM) போர்ட்டலைப் பயன்படுத்தி இந்திய ராணுவத்திற்கு ரூ.2,00,000 மதிப்புள்ள pampad-யினை விற்றுள்ளது. ஆரம்பத்தில் FPO-க்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியா தபால் துறையின் சேவைகளைப் பயன்படுத்தி விற்பனை செய்து வந்தனர். தற்போது, ONDC தளம் அச்சேவையினை மேம்படுத்தியுள்ளது எனலாம்.
Read more:
ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!
மின்கம்பம் அருகே நாற்றங்கால் தேர்வு செய்தால் ஆபத்தா? உழவியல் முறையில் IPM!