வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டுவரும் போராட்டத்தில் அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.
தொடரும் போராட்டம் (The Protest continue)
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
84ம் நாள் (84th Day)
இந்த சூழலில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று 84-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரயில் மறியல் (Rail Stir)
இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவான, 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், கடந்த, 6ம் தேதி மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணிகள் (Security tasks)
இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், ஹரியானா, உ.பி., மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் அருண் குமார் கூறியதாவது: ரயில் மறியல், நான்கு மணி நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
20 ஆயிரம் பேர் (20 thousand people)
பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின், 20 ஆயிரம் பேர் அடங்கிய 20 பிரிவினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்பில் இருப்பதன் வாயிலாக, உடனடியாக தகவல்கள் பெறுவோம். போராட்டத்தில் பங்கேற்போர், பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் படிக்க...
சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!