News

Monday, 23 June 2025 07:54 AM , by: Harishanker R P

ஊத்துக்கோட்டை:ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய் துறையினரின் அலட்சியத்தால், ஒவ்வொரு ஆண்டு பருவமழை காலங்களில் மழைநீர் கடலில் கலந்து வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் இருந்து, அருகில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் வாயிலாக, ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் வாயிலாக, ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 576 பெரிய ஏரிகள், ஊரக உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில், 654 சிறிய ஏரிகள் மற்றும் 3,227 குளம், குட்டைகள் உள்ளன.

கடந்தாண்டு குடிமராமத்து மற்றும் துார்வாரும் திட்டத்தின் கீழ், 1,212 ஏரி, குளம், குட்டை ஆகியவை துார்வாரப்பட்டன. மீதமுள்ள பெரும்பாலான ஏரி, குளம், குட்டை ஆகியவை ஆக்கிரமிப்பு, வருவாய்த் துறை அளந்து கொடுக்காதது உள்ளிட்ட காரணங்களால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் ஆரணி ஆறு, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமிக்கப்பட்டு, பழவேற்காடு அருகே கடலில் கலக்கிறது.

இதில், ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிராம ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நீர்வரத்து கால்வாய் உள்ளது. தற்போது, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் இருப்பதால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

இழுத்தடிப்பு


ஆரணி ஆற்றில் இருந்து நீர்வரத்து கால்வாய் வாயிலாக, சென்னங்காரணி கிராமம் வழியே, காக்கவாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதில், ஆரணி ஆற்றில் இருந்து சென்னங்காரணி கிராமம் வரை உள்ள வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், தண்ணீர் வருவதில்லை.

இதனால், கால்வாய் நீரை நம்பியுள்ள விவசாயிகள், பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரத்து கால்வாயை அளந்து கொடுக்குமாறு அதிகாரிகளிடமும், ஜமாபந்தியிலும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)