News

Monday, 05 April 2021 02:34 PM , by: Daisy Rose Mary

பவானிசாகர் பகுதிகளில் விளையும் சம்பங்கிப்பூ தொடர்ந்து அதிகப்படியாக விலை சரிந்து வருவதால் பூ விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கிப் பூ தற்போது விலை சரிந்து ரூ.30க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

தினமும் 2 டன் சாகுபடி

மேற்கூறப்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 2 டன் பூக்கள் விளைகிறது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

விலை வீழ்ச்சி

பவானிசாகர் பகுதியில் கடந்த மாதம் இறுதியில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ.140 வரை விற்பனையானது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை குறைந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.50 ஆக இருந்தது.

கிலோ ரூ.30க்கு விற்பனை

நேற்று முன்தினம் சம்பங்கி பூ கிலோவுக்கு மேலும் ரூ.10 குறைந்து ரூ.40-க்கு விற்பனை ஆனது. நேற்று சம்பங்கி பூ மேலும் ரூ.10 குறைந்து கிலோ ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி பூ விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இந்த விலைக்கு விற்றால் நாங்கள் நஷ்டத்தில் சாக வேண்டும் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)