சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 October, 2019 11:48 AM IST

நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பானது விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர். இடுபொருள் செலவு, ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை உயர்வு மிக குறைவு என பலரும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரை, இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பெய்துள்ளதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி, பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மேட்டூர் அணை இவ்வாண்டு நிரம்பி டெல்டா மாவட்ட விவசாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம். இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோன்று  பல ஆண்டுகளுக்கு பிறகு, ஈரோடு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் உள்ளிட்ட பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசின் இந்த அறிவுப்பு விவாசகிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இவ்வாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை அறிவித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.65 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக விவாசகிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய இடுபொருள் செலவு, கூலி உயர்வு, உற்பத்தி செலவுடன்  ஒப்பிடுகையில் இந்த கொள்முதல் விலை மிக குறைவு என கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் கடந்தாண்டு விற்கப்பட்ட உரத்தின் விலை ரூ.400க்கு, ஆனால்  தற்போது ரூ.1200க்கு விற்பனையாகிறது. அதே போன்று கடந்தாண்டு ஒரு ஏக்கர் நடவுக்கு  கூலியாக ரூ.3 ஆயிரம் கொடுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அவை இருமடங்காக ரூ.6 ஆயிரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தி செலவு இரண்டு முதல் மூன்று மடங்காக உயர்ந்து விட்ட நிலையில் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2500ம், மோட்டா ரகத்திற்கு ரூ.2300ம் என அறிவித்தால் மட்டுமே கட்டுபடியாகும் என விவசாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர

நன்றி : தினகரன்

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Farmers Upset With Recently Announced Paddy Procurement Price
Published on: 11 October 2019, 11:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now