News

Monday, 05 May 2025 12:18 PM , by: Harishanker R P

பாசன கிணறுகளில் குறைந்த குதிரை திறன் கொண்ட மின் மோட்டாரை மாற்றி கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டாரை பழைய மின் இணைப்பிலேயே பயன்படுத்த மின்வாரியத்தினர் அனுமதி வழங்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள மின்சாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி வேலூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பாசன ஆதாரமாக காவிரி ஆறு. வாய்க்கால், கிணறு உள்ளிட்டவைகள் உள்ளன. கிணற்றுப் பாசனத்தை பயன்படுத்தும் விவசாயிகள் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின் மோட்டார் பயன்படுத்து கின்றனர்.

இதற்காக 3 ஹெச்பி (குதிரைத் திறன்). 5 ஹெச்பி உள்பட பல்வேறு வகையான திறன் கொண்ட மின் மோட்டார்களை விவசாயிகள் பயன்படுத்து கின்றனர். இந்நிலையில் குறைந்த திறன் கொண்ட மின் மோட்டார்களை மாற்றி கூடுதல் திறன் கொண்ட மின்மோட்டார் பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் அதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பித்தால் பழைய மின் இணைப்பில் கூடுதல் திறன் கொண்ட மின்மோட்டார் பயன்படுத்த மின்வாரியத்தினர் அனுமதி வழங்கும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் இந்நடைமுறை தற்போது வழக்கத்தில் இல்லை என மின்வாரியத்தினர் தெரிவிப்பதாக விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பரமத்தி வேலூர் ராஜவாய்க் கால் பாசன விவசாயிகள் கூறியதாவது: பாசன கிணறுகளில் பயன்படுத்தப்படும் குறைந்த திறன் கொண்ட மின் மோட்டாரை மாற்றி கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் அது தொடர்பாக மின்வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பேரில் பழைய மின் இணைப்பிலேயே கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்த மின்வாரியத்தினர் அனுமதி வழங்கும் நடைமுறை இருந்தது. தற்போது இந்த நடைமுறை இல்லை என மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் கடும் வெயில் நிலவி வருகிறது.

இச்சமயங்களில் குறைந்த திறன் கொண்ட மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் இறைத்து விளை நிலங்களுக்கு பாய்ச்சுவதில் சிரமம் நிலவி வருகிறது. இதனால் கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்த விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்கின்றனர். எனினும், பழைய மின் இணைப்பில் கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்க இயலாது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிதாக இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்படி தெரிவிக் கின்றனர். இதற்கு கால தாமதம் ஆகும்.

இதனால் விவசாயிகள் சிரமத்திற் குள்ளாவர். மாநிலம் முழுவதும் இப்பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிதாக பொறுப் பேற்றுள்ள மின்சாரத் துறை அமைச்சர். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததை மீண்டும் பயன் பாட்டு க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Read more:

இயற்கை வேளாண்மைக்கு மாறுவதில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள்

நேரடி விதை நெல் (DSR) முறை மூலம் நெல் சாகுபடி: சவால்கள் மற்றும் தீர்வுகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)