இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 November, 2021 6:51 AM IST
Farmers who will continue the protest

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவம்பர் 19) அறிவித்துள்ளார். வரும் பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி (PM Modi) அறிவித்தபோது, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத், மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில் திகைத் இருந்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

திகைத் அளித்த பேட்டியில், 3 வேளாண் சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும். குறைந்தப்பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க, சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும். இது நடக்காமல், போராட்ட களத்தில் இருந்து விவசாயிகள் வீடு திரும்ப மாட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்தை இனிப்புகள் வழங்கி கொண்டாடக் கூடாது. போராட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை, நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

பிடிவாதம்

ஒன்றிய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி அளித்த பேட்டியில், வேளாண் சட்டங்களை (Agri Laws) ரத்து செய்யும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை, பிரதமர் மோடி பெரிய மனதுடன் எடுத்துள்ளார். இந்த சட்டங்களை எதிர்த்த சிறிய அளவிலான விவசாயிகளின் நலனை கருதி, அவர் எடுத்த இந்த முடிவை விட பெரிய முடிவு வேறு இருக்க முடியுமா? எனவே, விவசாயிகள் வீட்டுக்கு திரும்பி, விவசாயத்தை கவனிக்க வேண்டும். போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்க தலைவர்கள் பிடிவாதம் பிடிக்கக் கூடாது, என்றார்.

வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் விவசாயிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். அது மட்டுமின்றி, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியே இந்த வேளாண் சட்டம் வாபஸ்.

மேலும் படிக்க

வேளாண் சட்டம் வாபஸ்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்- பிரதமர் மோடி அறிவிப்பு!

English Summary: Farmers who will continue the protest with the withdrawal of the agricultural law!
Published on: 20 November 2021, 06:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now