News

Friday, 05 November 2021 08:12 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

புதுவை அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்துச் சிதறியதில், தந்தை, மகன் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விழிப்புணர்வு (Awareness)

பட்டாசு இல்லா தீபாவளியோ, விபத்து இல்லா தீபாவளியோ இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் பட்டாசுகளைக் கையாளுதல் என்பது சற்று கவனம் மிகுந்ததாக இருக்க வேண்டும். விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது, காவல்துறையினர், விபத்தில்லாத் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.

எது எப்படியிருந்தாலும், நிகழும் விபத்துக்களைத் தடுக்க முடியாது. அதே நேரத்தில் கூடுதல் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருந்தால், விபத்துக்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.

நாட்டுப் பட்டாசுகள் (Country crackers)

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன். இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக சென்றார். பின்னர், தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக, ட இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கிப் புறப்பட்டு வந்தார்.

வெடித்துச் சிதறின (Exploded and scattered)

புதுச்சேரி அருகேவுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்பில் வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்தன. இதில் சம்பவ இடத்திலே தந்தையும் மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

சாலை முழுவதும் இவர்களின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தது நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தன. அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூரைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்தபோது அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன், கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

போலீஸார் விசாரணை (Police investigation)

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரனை நடத்தினர்.

மேலும் படிக்க...

ஆசியாவிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம்!

வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)