News

Friday, 15 July 2022 06:45 PM , by: T. Vigneshwaran

FD Scheme

இந்தியாவில் பந்தன் வங்கி, டிசிபி வங்கி, ஆர்பிஎல் வங்கி, யெஸ் வங்கி போன்றவை சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கான பிக்செட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்துவரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதங்களை 4.90 லிருந்து 5 புள்ளிகளாக உயர்த்தியது. இதனை தொடர்ந்து பொதுவுடைமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில்கடன் என அனைத்து வகை கடன்களுக்கும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதோடு வங்கிகள் தங்களது சேமிப்பு வங்கி கணக்கு தொடங்கி ஆர்டி மற்றும் எப்டிக்கான வட்டி விகிதங்களையும் போட்டிப்போட்டு கொண்டு உயர்த்தி வருகிறது.

குறிப்பாக சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு ஆர்டி மற்றும் எப்டியின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் வட்டி விகிதம் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

தனியார் வங்கியான பந்தன் வங்கி( Bandhan Bank) மற்ற வங்கிகளை காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. பொதுவாக மற்ற வங்கிகள் 0.50 சதவீதம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 கோடி ரூபாய்-க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ள நிலையில், புதிய வட்டி விகித மாற்றங்கள் ஜூலை 4ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு அமலுக்கு வந்தது.

இதன்படி மூத்த குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகை 3.75% முதல் 6.35 % வரை வழங்குகிறது. 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகை கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.24 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த மாற்றம் தற்போதைய பண வீக்க விகிதத்தை விட 0.21 சதவீதம் அதிகமாகும்.

இவ்வங்கி ரூபாய் 2 கோடிக்கு கீழே உள்ள நிலையான வைப்புகள் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகித மாற்றத்தை ஜூன் 22ம் தேதி முதல் அமல்படுத்தியது. இதன்படி 7 நாள்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான எப்டி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 5.30 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

மேலும் 18 முதல் 120 மாதங்களில் மெச்சூரிட்டியடையும் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கும் முத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.10 சதவீதம் பெறுவார்கள் என வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு பணவீக்க விகிதத்தை விட 5 புள்ளிகள் அதிகமாகும்.

மேலும் படிக்க

GROWiT என்றால் என்ன? விவசாயிகளுக்கு பாதுகாப்பு தரும் விவசாய அக்ரிடெக் நிறுவனம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)