தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், தடுப்பூசி போட்டு கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி, 1.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தினமும் தடுப்பூசி (Vaccine) போட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி
நாடு முழுதும், கொரோனா தடுப்புக்கான, 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகள், ஜனவரி 16 முதல் போடப்பட்டு வருகிறது. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 39.44 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி திருவிழா
நாடு முழுதும் இம்மாதம், 11ம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடந்தது.
இந்த திருவிழாவில், தமிழகத்தில், தினமும் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, 1.60 லட்சம் நபர்களுக்கு தினமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால், தடுப்பூசி மையங்களில் (Vaccine centers) கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பரவலைத் தடுக்க முக கவசம் (Mask) அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு, தடுப்பூசி போட்டு கொள்வதும் அவசியம்.
தற்போதைய சூழலில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதன்படி, தினமும், 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை தொடர்ந்து தக்க வைக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த, மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!
பிரபலமாகி வரும் வாழை இலை குளியல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!