இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 May, 2022 6:28 AM IST
Featured in DC, Reason for Dismissing Students

பள்ளிகளில் அநாகரிகமாக நடக்கும் மாணவர்களை நிரந்தரமாக நீக்கினால், எதற்காக நீக்கினோம் என்பதை டி.சி.,யில் எழுதி தருவோம் என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதத்தில், பா.ம.க., - ஜி.கே.மணி பேசினார்.

மாணவர்கள் (Students)

பா.ம.க., - ஜி.கே.மணி பேசுகையில், மாணவர்கள் வகுப்பறையில் பாய் போட்டு படுத்தனர். ஆசிரியர்களை தாக்கினர் என செய்திகள் வருகின்றன. பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.

அமைச்சர் மகேஷ்: அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி துவங்கும்போது, முதல் ஒரு வாரத்திற்கு மன நலம் பற்றிய பாடம் நடத்தப்படும். போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன் பின்னரே பாடங்கள் நடத்தப்படும்.

இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், மாணவர்களிடம் கவனச்சிதறல் உள்ளது. அவர்களை ஒருமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, மாணவர்கள் மன அழுத்தத்திலும் உள்ளனர். மாணவர்களை நல்வழிபடுத்தும் பொறுப்பு, பெற்றோருக்கும் உள்ளது. ஆசிரியர்களை குறை கூறுவது தவறு. அரசு, பெற்றோர், ஆசியர்களின் கூட்டு முயற்சியால், மாணவர்களை திருத்த வேண்டும்.

மாணவர்கள் பள்ளிகளில் அநாகரிகமாக நடந்து கொண்டால் தற்காலிகமாக நீக்குவோம். நிரந்தரமாக நீக்கினால், எதற்காக நீக்கினோம் என, மாற்றுச் சான்றிதழான, டி.சி.,யில் எழுதி தருவோம். பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவது தடுக்கப்படும்.

மேலும் படிக்க

கோதுமை நிறுத்தி வைப்பு: மத்திய அரசு முடிவு!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குறைந்தது நிலத்தடி நீர்!

English Summary: Featured in TC, Reason for Dismissing Students: Minister Mahesh!
Published on: 11 May 2022, 06:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now