News

Monday, 01 February 2021 06:09 PM , by: KJ Staff

Credit : Youtube

மத்திய அரசின் பட்ஜெட் இன்று, பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Seetharaman) தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இனி காண்போம்...

6 தூண்கள் என்ற அடிப்படையில் மத்திய பட்ஜெட் (Federal Budget) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாகக் கவனிக்கப்படும் என்பது தான் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சம். நாட்டு மக்களின் உடல் நலனை உறுதிப்படுத்தும் சுகாதாரத்திட்டங்கள் (Health plans) தான் இந்த பட்ஜெட்டின் முதல் தூண்.

முக்கிய அம்சங்கள்

  • உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
  • ஜூன் 2022ம் ஆண்டுக்குள் மேற்கு - கிழக்குப் பகுதிகளில் சரக்கு பாதை அமைக்கப்படும்
  • நாடு முழுக்க 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
  • மாநில முதலீட்டு (Invest) திட்டங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 7,400 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் (Income) இரட்டிப்பு

8 தூண்கள்:

  1. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு
  2. ஆரோக்கியமான இந்தியா
  3. நல்லாட்சி
  4. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு
  5. அனைவருக்கும் கல்வி
  6. பெண்களுக்கான அதிகாரம்
  7. சரக்கு பாதை மேம்பாடு
  8. ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய எட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Credit Tamil Top news

ஜவுளிப்பூங்காக்கள்

  • பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்
  • நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
  • இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை உருவாக்கப்படும்.
  • 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் துவங்கப்படும்.
  • நாடு முழுவதும் ஊட்டச்சத்து மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும்.
  • அரசின் சொத்துகள் மூலம் வருவாயை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை துவக்கப்படும்
  • 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும்
  • பழைய வாகனங்களை திரும்ப பெறும் புதிய கொள்கை
  • பழைய மோட்டா் வாகனங்கள் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் காற்று மாசை (Air pollution) குறைக்க திட்டம்

சாலைப்பணிகள்

  • நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 11,500 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் துவங்கும்
  • தமிழகத்தில் 3,500 கி.மீ., புதிய சாலை திட்டத்திற்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சாலை திட்டங்கள்
  • மதுரையில் இருந்து கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை
  • கன்னியாகுமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை
  • மூலதன செலவினங்களுக்காக மாநில அரசுகள், அதிகார அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • மும்பை - குமரி இடையே புதிய வழித்தடம் அமைக்க திட்டம்
  • பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்தாண்டு ஜூன்22ல் முடிவடையும்
  • 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
  • கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டு பணிக்கு ரூ.1,900 கோடி ஒதுக்கீடு
  • மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.95 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டம் மேலும் 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்

Credit : Hindu Tamil

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு

  • நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023க்குள் மின்மயமாகும்.
  • மின்சார விநியோக்தில் போட்டியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 137 சதவீதம்
  • பங்குச்சந்தைகளை ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்
  • வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு
  • காப்பீட்டு துறையில் (Insurance Department) அந்நிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்கிறது
  • அரசு வங்கிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ஆக அதிகரிப்பு
  • கப்பல் துறையில் உலக நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் போட்டி போட நடவடிக்கை
  • பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை
  • எல்ஐசி (LIC) நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • 2 பொதுத்துறை, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும்
  • பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • வரும் நிதியாண்டில் 100 சைனிக் பள்ளிகள் துவங்கப்படும்
  • நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50 சதவீதம் என கணிப்பு
  • அடுத்த நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக குறையும்
  • அடுத்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.34.50 லட்சம் கோடியாக உயரும்
  • சந்தைகளில் இருந்து ரூ.12 லட்சம் கோடி கடன் பெற இலக்கு
  • தங்கத்திற்கு இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு
  • கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்

  • ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்
  • உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
  • உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்
  • செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்
  • ரோபோடிக் துறையை மேம்படுத்த திட்டம்
  • கப்பல்களை மறுசுழற்சி (Ship Recycling) செய்யும் ஆலைகளுக்கு பிரத்யேக தளங்கள் உருவாக்கப்படும்
  • காஷ்மீருக்கு பிரத்யேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும்.
  • நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் (Gakanyan) திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டம்.
  • அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.
  • பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.
  • லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
  • புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம்.
  • சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)