மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 February, 2021 8:04 AM IST
Credit : Business Standard

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து, நாடு முழுமையாக மீளாத நிலையில், மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

3வது பட்ஜெட் (3rd Budget)

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 - 2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக அமைந்த பின், தாக்கல் செய்யப்படும் மூன்றாவது பட்ஜெட் இது.

பட்ஜெட் தாக்கல் (Budget filed)

நாட்டின் முதல், பெண் நிதி அமைச்சரான, தமிழகத்தை பூர்வீகமாக உடைய நிர்மலா சீதாராமன், இன்று காலை, 11:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட், என்பதால் அதிக சலுகை அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில், முதல் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மந்தமாக இருந்த பொருளாதாரம், கொரோனா பரவலால் மேலும் மோசமடைந்தது. நாட்டின், ஜி.டி.பி., (GDP) எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மைனசில் சென்று உள்ளது.

இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு சவால்களுக்கு இடையே இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்.பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒருபுறம், கொரோனாவால் பொருளாதார பாதிப்பில் சிக்கியுள்ள மக்களையும் மீட்க வேண்டிய கட்டாயம் மறுபுறம்.

எதிர்பார்ப்புகள் இடம்பெறுமா? (Will expectations be included?)

இன்னொருபுறம், வருமான வரிச் சலுகைகள் உட்பட, மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டிஉள்ளது.எனவே கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள், திட்டங்களின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகள் (Will expectations be included?)

ஆக, மத்திய பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. வருமான வரியில் தற்போதுள்ள நிரந்தரக் கழிவான, 50 ஆயிரம் ரூபாய் சலுகையை, 1 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில்,கொரோனா வைரசால், மருத்துவக் காப்பீடு வாங்குவது அதிகரித்துள்ளது. அதனால், மருத்துவக் காப்பீடுகளுக்கான வருமான வரிச் சலுகை வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளது

தற்போது 2.5 லட்சம் ரூபாயாக உள்ள வருமான வரிச் சலுகைக்கான உச்ச வரம்பு, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதைத்தவிர விவசாயிகளுக்கான PM-Kisan நிதியை ரூ.10,000 மாக உயர்த்துவது, வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி, இடுபொருட்களுக்கான மானியத்தை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!

English Summary: Federal Budget Filed Today - What are the benefits?
Published on: 01 February 2021, 07:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now