
நெகிழிகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய அரசு நெகிழிகளுக்கு (Plastic) நாடு முழுவதும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. நெகிழிகள் காரணமாக நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. அதனை உண்ணுவதால் பசுக்கள் போன்ற பல்வேறு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. கடல் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் நெகிழிகளால் பாதிப்பு ஏற்படுகிறது.
பிளாஸ்டிக் தடை
இதனால் மீன்கள் மற்றும் பெரிய உயிரினங்கள் கூட உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே தான் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இந்த தடையை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநில அரசுகள் இந்த தடையை பிறப்பித்துள்ளன. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் தடை ஏற்படும் வகையிலே ஒன்றிய அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த வருடம் ஜூலை 1 முதல் இந்த பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.
நெகிழிக்கு பதிலாக சணல் பைகள், துணிப்பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இருந்த போதிலும் காய்கறி வியாபாரிகளில் இருந்து அனைவரும் நெகிழிகளை பயன்படுத்தி வருகின்றனர். நெகிழிகளின் பயன்பாடு குறையவில்லை. உற்பத்தியும் குறையவில்லை. இதனால் சுற்றுச்சூழல் (Environment) பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.
இப்படி இருந்தால் நாம் கடல், காடுகள், மலைகள் என்ற எந்தவொரு பகுதியிலும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாகிறது. நகர்ப்புறங்களில் ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஒன்றிய அரசு தற்போது இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க