மத்திய அரசின் வேளாண் சட்டங்களை (Agri Laws) எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா, மேற்கு உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். எம்.எஸ்.பி., எனப்படும், குறைந்தபட்ச ஆதார விலை (Minimum resource price) தொடரும் என்பதற்கு உறுதியளிக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மத்திய பட்ஜெட் (Federal Budjet)
இந்த நிலையில், மத்திய பட்ஜெட் (Federal Budjet) தாக்கலின்போது, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் (Nirmala Seetharaman) கூறியுள்ளதாவது: விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், கடந்த, ஆறு ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது.
அதிக வருவாய்
அனைத்து பொருட்களுக்கும், உற்பத்தி செலவை (Production Cost) விட, 1.5 மடங்கு அதிகம் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், பருத்தி ஆகியவற்றின் கொள்முதல் (Purchase) பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு அதிக வருவாய் (Income) கிடைத்து வருகிறது. கோதுமையை பொறுத்தவரை, கடந்த, 2013 - 14ம் ஆண்டில், 33 ஆயிரத்து, 874 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதுவே, 2019 - 2020ம் ஆண்டில், 62 ஆயிரத்து, 802 கோடி ரூபாயாக உயர்ந்தது. நடப்பு, 2020 - 2021 நிதியாண்டில், ஏற்கனவே, 75 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அரசு கொள்முதலுக்கு நல்ல விலை அளிப்பதாலேயே, அதிகமானோர் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
40 மடங்கு
நெல்லைப் (Paddy) பொறுத்தவரை, கடந்த, 2013 - 14ம் ஆண்டில், 63 ஆயிரத்து, 928 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அது, 2019 - 2020ம் ஆண்டில், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 930 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது, 2020 - 2021 நிதியாண்டில், ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 765 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளை பொறுத்தவரை, 2013 - 2014ம் ஆண்டில், 236 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அது, 2019 - 2020ம் ஆண்டில், 8,285 கோடி ரூபாயாக உயர்ந்தது. நடப்பு, 2020 - 2021 நிதியாண்டில், 10 ஆயிரத்து, 530 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 2013 - 14 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 40 மடங்கு உயர்ந்துள்ளது. பருத்தி (Cotton) விவசாயிகளுக்கு, 2013 - 2014ம் ஆண்டில், 90 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதுவே, 2020 - 2021ல், 25 ஆயிரத்து, 974 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன்! தமிழகத்தில் கடற்பாசி பூங்கா!
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட்! பிரதமர் மோடி புகழாரம்!