News

Friday, 28 May 2021 10:00 AM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனாத் தொற்றை பரவ விடாமல் தடுத்தது வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை னத் தொடர்ந்து, ஜூன் 30 வரை பின்பற்றும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தடுப்பு விதிமுறைகள்

மத்திய உள்துறை அமைச்சகம், ஏப்., 29ல், மே மாதத்திற்கான கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

நீட்டிப்பு

கொரேனாவால் (Corona) பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியை தனிமைப்படுத்துவது, சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தடையின்றி சப்ளை செய்வது போன்றவற்றால், கொரோனா பரவல் குறைந்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டோர் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, ஏற்கனவே அறிவித்த கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை, ஜூன் 30 வரை கட்டாயம் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

உள்ளுர் பாதிப்பு நிலவரத்தை ஆராய்ந்து, விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து, அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தனிமனிதனும், தனிமனித விலகலை முறையாக கடைப்பிடித்தால் விரைவிலேயே கொரோனாவை விரட்டியடிக்கலாம்.

மேலும் படிக்க

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம்

2½ டன் வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)