தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி வழங்க கூடிய விரைவிலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மகப்பேறு நிதியுதவி
தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலமாக ஏழை கர்ப்பிணி தாய்மார்களின் முதல் பிரசவத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பிணிகளின் முதல் குழந்தைகளுக்கு நிதியுதவி கடந்த சில மாதங்களாகவே வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அதாவது, கிட்டத்தட்ட 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு தற்போது வரைக்கும் நிதியுதவி வழங்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
அதாவது, தமிழகத்தில் தற்போது வரைக்கும் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதில் கால தாமதம் ஆகிவிட்டது. எனவே, கூடிய விரைவில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய சுகாதார செயலாளருக்கு மருத்துவர் துறை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் படிக்க
வீடு தேடி வரும் வங்கி சேவைகள்: யாருக்கெல்லாம் பொருந்தும்?
ATM பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிகள் மாற்றம்: இன்று முதல் அமலுக்கு வருகிறது!