
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்று காலை முதலே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் அதிக ஒலியும், காற்று அதிக அளவில் மாசுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டிலும் பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க:
Business Ideas: வீட்டில் இருந்தே ரூ. 25000 வரை சம்பாதிக்கலாம்
பெண் குழந்தைகளுக்கு 1,50,000 ரூபாய் கிடைக்கும், இன்றே பெறவும்!!