1.மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகுகளில் மீன்பிடிக்க இரண்டு மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2.மீன் விலை கிடுகிடு உயர்வு
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அவற்றிற்கான விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிலோ வஞ்சிரம், இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல பாரை கிலோ 300க்கும், விளை மீன் கிலோ 400க்கும், சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
3.விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்காதீர்- மின்சார வாரியம் விழிப்புணர்வு
பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாதென மின்சார வாரியம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகள், பெரிய வனப்பரபை்பை கொண்டவை. இவ்வனப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் உணவு மற்றும் குடிநீர் தேடி - காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் படையெடுக்கின்றன. இதனைத் தடுக்க விவசாயிகள் மின்வேலி அமைத்து வரும் நிலையில், மின்சார வாரியம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4.புவிசார் குறியீடு பெற்ற கம்பம் பன்னீர் திரட்சை
கம்பம் பன்னீர் திரட்சை , சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் பன்னீர் திராட்சையில் அதிக திராட்சை விளையும் பகுதியாகும். இருப்பினும், ‘பன்னீர்’ வகை முக்கியமாக கம்பம் பள்ளத்தாக்குடன் தொடர்புடையது, இங்கு சாகுபடி பரப்பளவு 10 கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5.பசிபிக் பெருங்கடலில் இருந்து 200,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி சாதனை
வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து 200,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பைகளை The Ocean Cleanup Mission மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதுவரை கடலிலிருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இது புதிய மைல்கல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் பெரும்பகுதி நீர் நிலைகள் வழியாக கடலில்தான் போய்ச் சேர்கிறது.அப்படி சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் கடல் வளத்தை பாதுகாத்து, வருங்காலம் வளமாக இருக்க அரசு முதல் தனி மனிதன் வரை அனைவரும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் சூழ்நிலையில், The Ocean Cleanup கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மேலும் படிக்க
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு: பாடத்திட்டத்தில் மாற்றம்!
சுட்டெரிக்கும் கோடை வெயில்! வாடும் வனவிலங்குகள்!!