நாமக்கல்லில் நிலவும் தட்பவெப்பநிலை மாற்றத்தால் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
-
எதிர்வரும் நாட்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
-
ஒரு சில இடங்களில் லேசான மழையை காற்று மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் தென் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
-
வெப்பநிலை அதிகமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 71.6 டிகிரியாகவும் இருக்கும்.
-
சமீபகாலமாக மழை விட்டுவிட்டு பெய்வதால், ஈக்களின் இனப்பெருக்கத்துக்கு சாதகமான தட்ப வெப்பநிலை காணப்படுகிறது.
-
இதனால், கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகி வருகிறது.
-
அவற்றை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறைகளை கையாள வேண்டியது அவசியம்.
-
ஈக்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வெள்ளைத் தளை(Paper) ஒரு அட்டையில் குண்டுசியால் நான்கு மூலையிலும் கத்தி கோழிப்பண்ணையில் 24 மணி நேரம் இருக்கும் வகையில் வைத்துவிட வேண்டும்.
-
அடுத்த நாள் அந்த அட்டைகளை சேர்த்து அதில் காணப்படும் புள்ளிகளை (ஈக்கள் எச்சில்) எண்ணினால் தோராயமான ஈக்களின் எண்ணிக்கையைக் கண்டு கொள்ளலாம்.
-
100-க்கும் மேல் புள்ளிகள் காணப்பட்டால், ஈக்கட்டுப்பாடு முறைகளை உடனடியாகக் கையாளவேண்டும்.
-
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தேங்காய் மற்றும் கொப்பரைக்கு இந்த ஆண்டு குறைந்தபட்சம் என்ன விலை கிடைக்கும்? TNAUவின் கணிப்பு!
உச்சி முதல் பாதம் வரை- எக்கச்சக்க பலன் தரும் மருத்துவ மூலிகை கிராம்பு!