News

Thursday, 30 December 2021 04:45 PM , by: Deiva Bindhiya

Flipkart: Bumper offer on iPhone12 series, stay tuned

இந்தியாவின் முதன்மை ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில், தற்போது ஸ்மார்ட்போன் ஆண்டு இறுதி விற்பனை (Smartphone Year End Sale) நடந்து வருகிறது. இதில் சாம்சங் மற்றும் ஆப்பிள் முதல் சியோமி, விவோ என அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

இந்த பதிவில் `நாம் iPhone 12 தொடர் போன்களில், அதாவது iPhone 12 Mini, iPhone 12 மற்றும் iPhone 12 Pro ஆகியவற்றில் கிடைக்கும் சிறப்பான சலுகைகளைப் பற்றி பார்க்கலாம். 

64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட iPhone 12 Mini-இன் சந்தையின் விலை 59,900 ரூபாயாகும். ஆனால் பிளிப்கார்டில் இதற்கு 31% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போனை 40,999 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். 

மேலும், Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.2,050 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.38,949 ஆக குறையும். இது தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக, இந்த போனை எக்ஸ்சேஞ்ச் சலுகை அடிப்படையில் வாங்கினால் ரூ.15,450 வரை சேமிக்கலாம். இதன் மூலம் இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை வெறும் ரூ.23,499-க்கு வாங்கி மகிழ்ந்திடலாம். 

நீங்கள் iPhone12-ஐ வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இது அதற்கு ஏற்ற நேரமாகும். இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில், அதன் சந்தை விலையான ரூ.65,900-க்கு பதிலாக 21% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.51,999-க்கு வாங்கலாம். Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த 64GB போன் வாங்க பணம் செலுத்தினால், 5%, அதாவது ரூ.2,600 கேஷ்பேக் கிடைக்கும்.

அதன் பிறகு இந்த போனின் விலை ரூ.49,399 ஆக குறையும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் இந்த போனை வாங்கும்பொருட்டு, ரூ.15,450 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,949 ஆகும்.

iPhone12 ப்ரோவையும் மிகவும் மலிவாக வாங்கலாம்

iPhone 12 தொடரின், ப்ரோ மாடலான iPhone 12 Pro இன் விலையில் எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. எனினும், டீலில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் சலுகைகளின் உதவியுடன், இந்த ஸ்மார்ட்போனை மிக மலிவாக வாங்கும் வாய்ப்பிருக்கிறது. 

இந்த 128 ஜிபி ஐபோன் 12 ப்ரோவின் அசல் விலை ரூ.1,09,900. ஆனால் இந்த போனை வாங்கும் போது ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 5% அதாவது ரூ. 5,495 கேஷ்பேக் கிடைக்கும். இதனுடன் பழைய ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக இதை வாங்கினால், வாடிக்கையாளர்கள் 15,450 ரூபாய் வரை சேமித்திடலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த இரண்டு சலுகைகளையும் இணைத்து, போனின் விலை ரூ.88,955 ஆகக் குறையும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை

தமிழகம்: பொங்கல் பானையின் விலை உயர்வு, காரணம் என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)