இன்று பெரும்பாலான மக்கள் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். நம்முடைய முன்னோர்கள் தோட்டத்தின் நடுவில் வீடு அமைத்து வசித்தனர். ஆனால் நாம் வீட்டுதோட்டம், மாடி தோட்டம் அமைக்க வேண்டியுள்ளது. பெருகிவரும் மக்கள் தொகையும், வளர்ந்துவரும் நகரங்களும், பெரும்பாலான மக்கள் பணி நிமித்தமாக நகரங்களை நோக்கி படையெடுப்பதால் மாடி தோட்டம் என்பதே நமக்கு சாத்தியமாகும்.
மாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைக்கும் முறை
மாடி தோட்டம், வீட்டு தோட்டம் என்பது அனைவருக்கும் சத்தியமே என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாகும். இதற்கென்று பிரத்தியேகமான இடமோ, பொருட்களோ தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அமைக்கலாம். தமிழக வேளாண்துறை மானிய விலையில் ( வளர்ப்பு பைகள், தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம், விதைகள்) தோட்டம் அமைப்பதற்கான பொருட்களை வழங்கி வருகிறது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலவசமாக செடிகள், மர கன்றுகளை வழங்கி வருகிறது. ஒரு சில தனியார் நிறுவனங்கள் நமது இடத்தின் அளவை ஆய்வு செய்து எவ்வகையான செடிகளை வளர்க்கலாம் என பரிந்துரை செய்து, அதற்கான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
பொதுவாக காய்கறி தோட்டம் அமைக்க குறைத்து 8 மணி நேரம் சூரிய ஒளி தேவை. பூந்தோட்டம், அலங்கார இலைகள் கொண்ட செடிகளை அமைக்க குறைத்து அளவு சூரிய ஒளி தேவை.
பராமரிக்கும் முறை
-
தோட்டம் அமைப்பதற்கு காலை, மாலை வேலைகள் உகந்ததாகும்.
-
தேர்வு செய்த இடத்தில் நீர் தேங்காமல் இருக்க, தளம் பாதிக்காமல் இருக்க பாலிதீன் பைகளை விரிக்க வேண்டும்.
-
செடி வளர்ப்பதற்கு என்று பிரத்தியேகமாக இருக்கும் தேங்காய் நார் பைகள், தேங்காய் நார் கட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது அதிக நேரம் ஈர தன்மையுடனும், பளு அற்றதாகவும் இருக்கும்.
-
பை அல்லது தொட்டியின் அடிப்புறம் நீர் வெளியேறுவதற்காக அதிக துவாரங்கள் தேவை.
-
பஞ்சகாவிய 50 மில்லி எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
-
பூச்சி அண்டாமல் இருக்க வேம்பு பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம்.
-
கோடை காலங்களில் காலை, மாலை காலங்களில் இருவேளையும், மற்ற காலங்களில் ஒரு வேளை தண்ணீர் போதுமானது.
-
தோட்டம் அமைப்பதற்கு காலை, மாலை வேலைகள் உகந்ததாகும்.
தவிர்க்க வேண்டியவை
-
கோடைகாலங்களில் புதிய தோட்டம் அமைப்பதினை தவிர்க்க வேண்டும்.
-
மழை காலங்களில் தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
-
ரசாயன உரங்களுடன் இயற்கை உரங்களை கலந்து செடிகளுக்கு போட கூடாது.
-
செடி பைகளையோ, தொட்டிகளையோ நெருக்கமாக வைக்காமல் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.