தீபாவளிப் பண்டிகை வருவதையொட்டி, பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 240 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ (Jasmine) விலை 5 மடங்கு அதிகரித்து 1400 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 200 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 1200 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி பூ 500 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனையான சம்மங்கி பூ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
5 மடங்கு விலை உயர்வு:
தீபாவளிப் பண்டிகை (Deepavali) நெருங்கும் நிலையில், மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் (Flower market) பூக்கள் விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது. மலர் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக (Sales) கொண்டுவரப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை (Continuous rain) காரணமாக பூக்கள் வரத்து வழக்கத்தை விட குறைவாக உள்ளதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாகவும் பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் 5 மடங்கு விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 80 முதல் 90 டன் வரை பூக்கள் வரத்து இருந்து வரும் நிலையில் தற்பொழுது பூக்கள் வரத்து 50 டன் மட்டுமே வருகிறது.
பூக்கள் விலை:
400 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் பூ 1500 ரூபாய்க்கும், கோழிகொண்டை பூ 80 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 250 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 150 ரூபாய்க்கும், கேந்தி பூ 100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. பூக்களின் வரத்து குறைந்து வரும் நிலையில், தேவை அதிகரிப்பதன் காரணமாக நாளை இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் (Merchants) தெரிவிக்கின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தீபாவளி ஸ்பெஷல்!பானை செய்யும் தொழிலாளி கண்டுபிடித்த மேஜிக் விளக்கு! குவியும் ஆர்டர்கள்!
தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டுமென, மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!