நிவர் புயலால், தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் இழப்பீடு வேண்டி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், பூ விவசாயமும் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் (Flowers) வரத்து குறைந்ததால் விலை மூன்று மடங்கு உயர்ந்து ஒரு முழம் மல்லிகை ரூ.100 வரை விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிவர் புயலால் (Nivar Cyclone) கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் தோட்டக்கலை (Horticulture) பயிர் செய்து வந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
பூக்களின் வரத்து குறைவு:
காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு (Flower Market) சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்காடு, சிறுவாக்கம், புரிசை மட்டுமல்லாது, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மலர்கள் விற்னைக்கு வரும். ஆனால் கடந்த 3 நாட்களாக நிலத்தில் நீர் வற்றாததால் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்தது. இதனால் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் 1 முழம் மல்லிகை பூ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று திருக்கார்த்திகை தீபம் என்பதால் பூ மார்க்கெட்டில் மல்லி விலை கிலோ ரூ.1,500க்கும், கனகாம்பரம் ரூ.1,000ம், சாமந்தி ரூ.250க்கும் விற்பனையானதால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் விலை உயர்வு:
நடப்பாண்டில் கடந்த ஆயுத பூஜை மற்றும் தீபாவளி அன்றும் பூக்களின் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதைப் போலவே பூக்களின் விலை உயர்வு, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், பூக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. நிவர் புயலால், பூ வரத்து குறைந்ததால் தான் இந்த விலையேற்றம் என பூ வியாபாரிகள் (Florists) தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய விவசாயம்!