News

Thursday, 10 June 2021 08:13 PM , by: R. Balakrishnan

Credit : Booking.com

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மரங்களுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் மரங்களைக் காக்க முடியும்.

அழிவின் விளிம்பில் மரக்கன்றுகள்

பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரிய வகை மரங்களின் சரணாலயம் திட்டம் (Tree Sanctuary) தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் அழிந்து வரும் மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் மஞ்சள் கடம்பு, ருத்ராட்சம், இலுப்பை, பூ மருது, பதிமுகம், கள்ளி மந்தாரை, பன்னீர் இலுப்பை உள்பட அழிவின் விளிம்பில் உள்ள 133 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார். இதில் சப்-கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாவட்ட வன அலுவலர் அருண்குமார், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா, துணைத் தலைவர் சரயுராஜேந்திரன், உரப்புளி ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மரக்கன்றுகள்

இந்தத் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்தப் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், இயற்கையின் வரங்களான மரங்களை பெரிதளவில் பாதுகாக்க முடியும்.

மேலும் படிக்க

உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!

கன்றுக்குட்டிகளை விற்று கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)