
சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன், சுற்றுலாவின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சுற்றுலா துறையில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை முதன்முறையாக சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுலா விருதுகள் (Tourist Awards)
சுற்றுலா விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 விருதுகள் (17 Awards)
மொத்தம் 17 விருதுகள் வழங்கப்படுகின்றன.
- தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்
- சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்
- சிறந்த பயண பங்குதாரர்
- சிறந்த விமான பங்குதாரர்
- சிறந்த தங்குமிடம்
- சிறந்த உணவகம்
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம்
- சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம்
- சுத்தமான சுற்றுலாத்தலம்
- பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர்
- சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர்
- சிறந்த MICE சுற்றுலா அமைப்பாளர்
- சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்
- சிறந்த சுற்றுலா வழிகாட்டி
- தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம்
- சுற்றுலாவினை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல்
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம்
மேலே கூறப்பட்ட விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு சுற்றுலாத் துறையால் உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க (For Apply)
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 2022 ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
தொழில் தொடங்க விருப்பமா? மானியத்துடன் உதவும் அரசின் திட்டங்கள்!
மாமல்லபுரத்தில் இன்று பிரம்மாண்டமான செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்கம்!