News

Saturday, 15 May 2021 02:06 PM , by: Elavarse Sivakumar

Credit : You Tube

லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, தவ்-தே புயலாக மாறி அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தவ்-தே புயல் (Tauktae Cylone)

லட்சத்தீவுப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தவ்-தே (Tauktae) புயலாக மாறியுள்ளது. தற்போது, மத்தியக் கிழக்கு அரபிக்கடல் மற்றும் இதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் வலுப்பெறக் கூடும்.

15.05.21

அதி கனமழை (Very Heavy rain)

இதன் காரணமாக, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு, 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசலாம்.

கனமழை (Heavy rain)

சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு கடலோர மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

16.05.21

கனமழை (Heavy rain)

நீலகிரி தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிதமான மழை (Moderate rain)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

  • சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் தோவாலாவில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

15.05.21

  • குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.05.21

  • மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் கர்நாடகக் கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 70முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் வளம் பெருக்க உதவும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)