News

Saturday, 20 July 2019 05:03 PM

டெல்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, ஷீலா தீக்ஷித் (81) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று மதியம் காலமானார்.

1998லிருந்து 2014 வரை தொடர்ந்து மூன்று முறை டெல்லி முதல்வராக ஆட்சி செய்தார். அவர்   வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

டெல்லியை பொறுத்தவரை ஷீலா தீக்ஷித் அவர்களின் கோட்டை என்று சொல்லும் அளவிற்கு வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் நெருங்க முடியாத அளவிற்கு வலிமையான ஒரு ஆட்சியினை 15 ஆண்டுகள்  செய்து வந்தார். டெல்லியின் பெரும்  வளர்ச்சிக்கு இவர் முக்கிய பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது. அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)