
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜ் திடீர் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இவரது மறைவு இந்திய அரசியலுக்கும், பாஜக - விற்கும் பேரிழப்பாகும்.
சுஷ்மா ஸ்வராஜ் வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு 7 முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். இந்திரா காந்திக்கு பிறகு வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தின் போதும் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

பாஜக-வின் முக்கிய தலைவர் என்பதையும் தாண்டி, தேசிய அளவில் அனைவராலும், பிற கட்சியினராலும் நேசிக்கப்பட்ட பெண் தலைவராக திகழ்ந்தார். வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளே பாராட்டும் படி இருந்தன. நாடு கடந்தும் பல்வேறு மக்களால் நேசிக்க பட்டவர்.
டுவிட்டரில் பதிவிடுவது, பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என எப்போதும் சுறுசுறுப்பாக இயக்கும் அவர் இறுதியாக செய்த டுவிட் வலை தளங்களில் பரவலாகிவருகிறது. "நன்றி பிரதமர் மோடி அவர்களே. மிகவும் நன்றி. எனது வாழ்க்கையில் இந்த நாளைத்தான் பார்ப்பதற்கு காத்துக்கொண்டு இருந்தேன்" என்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தார்.
Anitha Jegadeesan
Krishi Jagran