டெல்லி உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நல குறைவால் இன்று (ஆகஸ்ட் 24, 2019) காலமானார். அவருக்கு வயது 66.
வெகு நாட்களாகவே அருண் ஜெட்லிக்கு சர்க்கரை வியாதி இருந்தது வந்தது. இதன் காரணமாக அவரது உடல் எடை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 2014-ல் உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சையும் செய்துள்ளார். உடல்நிலை மோசமானதால் 2018, ஆகஸ்ட் முதல் அமைச்சக பணி, கட்சி பொறுப்பில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டார்.
அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி மூச்சுத் திணறல் பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் அனுமதிக்கப்பட்ட மறு தினமே மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு இதயம், நரம்பியல் மருத்துவர்களின் குழு தொடர்ந்து கவனித்து வந்தது.
இந்நிலையில் தொடர்ந்து அருண் ஜெட்லி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த வந்த நிலையில் இன்று மதியம் 12:07 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்சி தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran