மானியம் பெற்றுத்தருவதாகக் கூறி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
அரசு சார்பில் மானியம் (Grant on behalf of the Government)
வேளாண் பெருமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க ஏதுவாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய-மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.
ஆனால் தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகளை திசைதிருப்பி, பண மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
5 வட்டங்கள் (5 circles)
காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், குன்றத்துார் என, ஐந்து வட்டாரங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன.
பரிந்துரை (Recommendation)
இதில், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைக்கு, குறு வட்டங்கள்தோறும், ஓர் உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள் உள்ளன.
விவசாயிகளுக்கு மானியம் பெற்று தர, மேற்படி நபர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.
தலா ரூ.1,500
இந்நிலையில், வாலாஜாபாத் ஒன்றியம், மூலப்பட்டு கிராமத்திற்கு, நான்கு நாட்களுக்கு முன் சென்ற ஒருவர், 'நான் திருவண்ணாமலை மாவட்டம், துாசி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம்.'அரசு தோட்டக்கலைத் துறையில் இருந்து வருகிறேன். உங்களுக்கு மானியம் கிடைக்க வழிவகை செய்கிறேன்' எனக்கூறி, விவசாயி ஒருவரிடம் இருந்து, 1,500 ரூபாய் ஏமாற்றி வாங்கிச் சென்றுள்ளார்.
யாரையும் அனுப்பவில்லை (Didn't send anyone)
இதையடுத்து, அந்த விவசாயி, காஞ்சிபுரம் தோட்டக்கலை அலுவலகத்திற்கு வந்து, மானியம் குறித்து, விசாரித்தபோது, 'நாங்கள் யாரையும் பணம் பெற அனுப்பவில்லை' என, அதிகாரிகள் கூறி, அவரை திருப்பி அனுப்பினர்.
புகார் அளிக்கலாம் ( File a complaint)
இதுபோல், வாலாஜாபாத் சுற்று வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தோட்டக்கலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள், அந்தந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான், துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு சவுகரியமாக இருக்கும்.
இருப்பினும், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களை, விசாரிக்குமாறு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
எனவே இனிமேல் விவசாயிகள் யாரை நம்பியும் பணம் கொடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை உரத்திற்காக ஆடுகளை கிடைபோடும் பாரம்பரிய முறையை கடைபிடிக்கும் விவசாயிகள்!
சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! அதிர்ச்சி தகவல்!